×

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது எடுத்த அதே நிலைப்பாடுதான் இப்போதும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கையில் மயிலம் சிவகுமார் (பாமக) பேசும்போது, ‘‘சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘‘சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்பது 6 வழி சாலையாக ஏற்கனவே மாறிவிட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம்.  இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதே வேளையில் தமிழக முதலமைச்சரை பொருத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த அதே நிலைப்பாட்டில் தான் நாங்கள் இருக்கிறோம். 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள  பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே, திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அப்போதைய நிலைப்பாடே எங்களது இப்போதைய நிலைப்பாடு” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்….

The post சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது எடுத்த அதே நிலைப்பாடுதான் இப்போதும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Etb ,Velu ,Chennai ,Mayilam Sivagamar ,Bamaka ,Public Works and Highways Department ,Salem 8 ,A. Etb ,
× RELATED நாகப்பட்டினம் பகுதியில் நடந்து வரும்...